Wednesday, July 7, 2010

கருணாநிதிக்கு செம டோஸ்.

அண்மையில் உங்களில் பலரும் கண்டுகளித்திருக்கக் கூடிய மாபெரும் நகைச்சுவை நிகழ்ச்சி செம்மொழி மாநாடு. உங்களுக்கு எப்படியோ எமக்கு சிரித்து சிரித்து வயிறு வலித்துவிட்டது. அதைப் பற்றி இங்கு பகிர்ந்துகொள்கிறோம்.

கருணாநிதி ஆட்சி கிட்டத்தட்ட முடியும் இவ்வேளையில் செம்மொழி மாநாடும் நடந்து முடிந்திருக்கிறது. அதாவது ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக தமிழுக்காக ஏதும் செய்யாத நிலையில் ஆட்சி முடிவடையும் நிலையில் விழா எடுக்க காரணம் என்ன? (பலமுறை ஆட்சிக்கு வந்ததையும் கணக்கில் கொள்ளலாம்)

மக்கள் மனதில் தனது ஆட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்கென்றா நினைக்கிறீர்கள். எமக்கு அப்படியெல்லாம் நம்பிக்கையில்லை. பலநூறு கோடிகள் புரளும் இந்தவிழா ஆட்சியாளர்களுக்கு அமுதசுரபி. விழாமுடிந்தும் பல திட்டங்கள் தீட்டி  பணம் ஒதுக்க வசதியை அளிக்க இடம்தருவது தமிழ்த்தாய்க்கு மருத்துவம் பார்ப்பது.

இந்த ஆட்சி முன்னெப்போதும் நடந்திராத அளவிற்கு கட்டற்ற அதிகாரத்துடன் மக்களின் கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் மறுத்து மக்களை மந்தைகளைப்போல் நடத்தியிருக்கிறது. மந்தையில் சில ஆடுகள் உரிமைகளுக்காக கூக்குரலிட்டாலும் பெரும்பான்மையான ஆடுகள் மந்தையில் ஐக்கியமாகிவிட்டன. 

சராசரி தமிழனுக்கு இந்த கருணாநிதியின் கீழ்மை குணம் தெரியாதது கூட பிரச்சனையல்ல. படித்த, சுயநலமிக்க, மனிதரிலும் விலங்குகளிலும் சேர்க்க முடியாதபடி அலையும் ஒரு கூட்டம், கருணாநிதியின்பின் நக்கிப்பிழைக்க அலைவதுதான், நாம் வாழும் சுழலை நமக்கு உணர்த்துகிறது. இப்படியாப்பட்ட பயல்கள் இருக்கும் வரையில் கருணாநிதிக்கு என்னபயம்?

சரி காமெடிக்கு வருவோம்.

செம்மொழி மாநாட்டில் நடந்த கவியரங்கங்களில் ஒன்று கிளம்பிற்றுகாண் தமிழச் சிங்கக் கூட்டம். இதை எளிமைப்படுத்திச் சொல்வதெனில் "சிங்கம் கிளம்பிடுச்சுடோய்!" என்று நாம் நக்கலுக்கு சொல்லும் வரிகளையே கவியரங்கத் தலைப்பாக்கி இருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது காமெடி மூடு வரணுமில்ல.

கவியரங்கில் பங்கேற்ற பலரைப்பற்றி உங்களுக்கு சிறு அறிமுகம் தருகிறோம்.

அதாவது கவியரங்கத் தலைவர் வைரமுத்து இருக்காரே அவருக்கு எந்த ஆட்சி வந்தாலும் பிரச்சனை இல்லை. ஆட்சியாளர்களின் தயவு தேவைப்படும் பட்டியலிலும் இவர் தலைமைக் கவிஞர்தான். அதாவது போக்குவரத்து நெரிசல் மிக்க கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரம் ஏரியாவில் கார் பார்க்கிங் வசதிகூட இல்லாமல் அம்மாம் பெரிய கல்யாண மண்டபத்தை நடத்தறதுன்னா சும்மாவா? இதுமாதிரி பல விசயங்களுக்கு ஆட்சியாளர்களைப் பகைச்சுக்கிட்டா வண்டி ஓடுமா?

அடுத்த ஆளப் பார்ப்போம்.
மரபின் மைந்தன் முத்தையா.
இவர் வைரமுத்து, ஜக்கி வாசுதேவ் போன்ற பல தலைகளுக்கு வலதுகரமாக இருப்பவர். ஆதாயம் கிடைக்குமெனின் இடதுகரமாகவும் இருப்பவர். நுண்ணறிவும் படிக்கிற பழக்கமும் இருந்தாலும் அதிகார வர்க்கத்துடன் ஒட்டிக்கொண்டு அலைபவர். எனவே இவரது அறிவுக்கு எந்த மரியாதையும் கிடையாது.

வாராரய்யா வாராரு முத்துக்குமாரு.
இருக்கிற கழிசடை திரைக்கவிஞர் கூட்டத்தில் இவர் கொஞ்சம் பரவாயில்லையென பேசப்படுபவர்.

வைரமுத்துவின் பருத்த பின்புறம் இளைஞர்கள் திரைத்துறையில் நுழைய தடையாக இருப்பதாக சில வருடங்களுக்குமுன் புலம்பியவர்தான் முத்துக்குமார். இப்போது இவரது பின்புறம் பருத்துவிட்டதாக் பல இளைஞர்கள் சொல்கிறார்கள். இவர் எல்லா படங்களுக்கும் எழுதமுடியாமல், எழுதிக் கொடுப்பதற்கென்றே ஒரு பாக்டரி வைத்திருக்கிறார் என்றும் அந்த கவிதைத் தொழிற்சாலையில் புதிதாக பாடல் எழுத வரும் பலர் பணிபுரிவதாகவும் நமக்கு செய்திகள் வருகின்றன.

தமிழச்சி.
அவர் ஒரு தி.மு.க கவிஞர்.


வாலி.
பார்ப்பானைத்திட்டி கைதட்டல் வாங்கிய பார்ப்பான்.
பொதுவாகவே பார்ப்பான்
எல்லோரது சாவிலும் பிழைக்கப் பார்ப்பான்.

வாலி தலைமையிலான கவிதை அமர்வில் பழனிபாரதி.
பாரதி பெயரை கெடுக்க பலபேர். அதில் இவருக்கு இப்போதுதான் இடம் கிடைத்திருக்கிறது.

பாரதி என்றவுடன் யுகபாரதியின் நினைவு வருகிறது.
இந்த கவியரங்கில் இல்லையென்றாலும் கருணாநிதிக்கு சில மாதங்களுக்கு முன்னர்தான் துதிபாடினான் யுகபாரதி.

கணையாழி அலுவலகப் பொடியனாக (ஆபீஸ் பாய்) இவன் இருந்தபோது, தங்களது படைப்புகளை கணையாழி பிரசுரத்துக்கு அனுப்பிவைத்த எழுத்தாளர்கள், அது குறித்து அறிய  இவனுக்கு தொலைபேசியில் பேசிவிட்டு வைத்தவுடன், மற்றவர்களிடம் "அலையறானுங்க" என்று கேவலமாகப் பேசியவன். அதேபோல் பிரிண்டிங் மெஷின் தந்த திமிருடைய பலரில் இளையபாரதியும் தமிழினி வசந்தகுமாரும் உண்டு.

சரி குதிரை வேறு திசையில் ஓடத்தொடங்கிவிட்டது.
மீண்டும் காமெடிக்கு வருவோம்.

ம.முத்தையா, தணிகைச்செல்வன், இளம்பிறை உள்ளிட்ட பலரும் ஈழத்தை நினைத்து கொதித்தார்கள். கருணாநிதி முகம் சுழிப்பதற்குள் அவரைப் பாராட்டி நான்குவரி பாடி மகிழ்வித்தார்கள்.

சிறுபிள்ளைகளைகளிடமிருந்து ஒரு பொருளை மறைத்து பாதுகாக்க ச்சூ என காற்றில் கைவீசி பொருளை கக்கத்துக்குள்ளே மறைத்து விடுவோம். குழந்தையும் வானத்தைப்பார்த்து ஏமார்ந்துபோகும். அதேபோல்தான் ஈழத்தின் நிலையை எண்ணி கொதித்தார்கள் இந்த கவிஞர்கள். ஆனால் அவர்கள் கைநீட்டிய திசையைப் பார்த்தோம். அங்கு இன அழிப்புக்கு துணைபோன யாருமே இல்லை. கவிஞர்களின் கக்கத்துக்குள் கருணாநிதி பாதுகாப்பாக இருந்தார்.

கருணாநிதியின் கட்சிக்காரர்களைவிட இந்த கவிஞர்கள் ஆபத்தானவர்கள். குற்றவாளியை பாராட்டுவதன் மூலம் இவர் குற்றவாளி இல்லையென மக்களிடம் பொய்ப்பிரச்சாரத்தையும் செய்பவர்கள் ஆகிறார்கள்.

வாயார, மனதார கருணாநிதியை பலர் புகழ்ந்தாலும் அந்த புகழ்மொழிகளுக்குள்ளும் வசைச்சொற்கள் அவர்கள் அறியாவண்ணம் நிறைந்து கிடந்தன. எடுத்துக்காட்டாக வைரமுத்துவின் வரிகளைப் பாருங்கள்.

"உங்கள் காப்பீட்டு திட்டத்தில் உழவன் சேர்ந்தான்
உழைப்பாளி சேர்ந்தான்
அன்னத்தாய் சேர்ந்தாள்
பொன்னுத்தாய் சேர்ந்தாள் இன்னும் சேராத ஒரே தாய் தமிழ்த் தாய்
உன் திட்டம் தெரியும் எனக்கு
காப்பீட்டு திட்டத்தில் தமிழ் தாயை சேர்க்கத்தானே இந்த தடபுடல் மாநாடு"கருணாநிதியை மட்டுமல்ல வேறு யாரையுமே பகைத்துக்கொள்ள மாட்டார் வைரமுத்து என முன்பே பார்த்தோம். காப்பீட்டு திட்டம் என்பது ஆரோக்கியத்தின் குறியீடாகக் கருதியே மேற்கண்ட வரிகளை  வைரமுத்து எழுதியிருந்தாலும் அந்த வரிகள் உண்மையில் சொல்ல வருவது என்ன?


உழவன் சேர்ந்தான் = உனது ஆட்சியில் உழவன் நலமாயில்லை.
உழைப்பாளி சேர்ந்தான் = அவனும் ஆரோக்கியமாக இல்லை.
அன்னத்தாய், பொன்னுத்தாய் = ஏழை எளிய மக்களையும் நீ நன்றாக வைத்திருக்கவில்லை.
தமிழ்த்தாயை காப்பீட்டில் சேர்ப்பது  = கடந்த உன் ஆட்சியில் தமிழுக்காக நீ ஏதும் செய்யவில்லை.


மொத்தத்தில் கருணாநிதியைப் பார்த்து,
"உன் ஆட்சியில் தமிழன் எந்த நன்மையையும் அடையவில்லை" என்று வைரமுத்து அவரையும் அறியாமல் சொல்லிவிட்டார். 


வைரமுத்து கடுமையான விமர்சனப் பார்வையுடன்தான் இதைச் சொல்லியிருக்கமுடியும் என்று நினைக்கவைப்பது "தடபுடல் மாநாடு" என்ற சொற்பிரயோகத்தால்தான். ஆனால் நமக்குத் தெரியும் கவிக்கோ அப்துல்ரகுமான் உள்ளிட்ட பிழைப்புவாதிகளின் பட்டியலில் வைரமுத்து அசைக்கமுடியாத இடத்தைப் பெற்றிருப்பவர் என்று.வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு:
  1. இவர்களில் எவனும் கருணாநிதிக்கு எதிராகப் பேசி தனது வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்ளமாட்டான்.
  2. அப்படியே இவர்கள் கருணாநிதிக்கு எதிராகப் பேசினாலும் அவருக்கு ஏதும் நடந்துவிடாது.

13 comments:

udhavi iyakkam said...

காக்காய் கவிகளின்
கழிசடைத்தனத்தை
அம்பலப்படுத்தியமைக்கு
பாராட்டுக்கள்

Anonymous said...

very amazing speech

எவனோ ஒருவன் said...

சுய மரியாதையை தூரமாய் எறிந்துவிட்டு சுய லாபம் கருதி வாலை ஆட்டும் கூட்டங்கள்!

”சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் வெறும் சோற்றுக்குக்கா வந்ததிங்கு பஞ்சம்” என்னும் பாரதியின் வரிகள்தாம் ஞாபகம் வருகின்றன.

Anonymous said...

I feel very sad.

வெட்டு 1 துண்டு 2 said...

நன்றி உதவி இயக்கம்,
நன்றி கிறிஸ்ட்டி
நன்றி எவனோ ஒருவன்.

வெட்டு 1 துண்டு 2 said...

நண்பர்களே இப்பதிவை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் செய்து பரப்புங்கள்.
எமது அனுமதியின்றி உங்கள் தளத்திலும் இப்பதிவை வெளியிடலாம்.
நமது நோக்கம் போலிகளின் முகத்திரையைக் கிழிப்பது மட்டும்தான்.

இந்த பதிவில் யுகபாரதி பற்றி குறிப்பிட்டதற்கு பதிலாக பலவிதமான அரிதாரச் சொற்களை பயன்படுத்தி நினைவிருக்கிறதா? என்ற தலைப்பில் அவனது தளத்தில் எழுதியிருப்பதைப் பாருங்கள். அவன் உண்மை முகம் வெளிப்படுவதை அவனால் தவிர்க்க முடியாததையும் நீங்களே உணரலாம்..

சூர்யகதிர் said...

"இந்த ஆட்சி முன்னெப்போதும் நடந்திராத அளவிற்கு கட்டற்ற அதிகாரத்துடன் மக்களின் கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் மறுத்து மக்களை மந்தைகளைப்போல் நடத்தியிருக்கிறது."

என்ன நண்பரே அதட்குள்ளாகவா முந்தய ஆட்சியை மறந்துவிட்டீர்?!

வெட்டு 1 துண்டு 2 said...

சூரியகதிர்,
முந்தைய ஆட்சியை மறக்கவில்லை. அரசுப் பணியாளர்களை விட்டுக்கு அனுப்பிய விடயத்தில் மக்களிடம் ஏற்பட்ட எழுச்சி, பல்லாயிரம் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது எழவில்லை. காரணம் மக்கள் மட்டுமா நண்பரே.

தமிழ்மணி said...

அரசு, அரசியல்வாதிகளை விடுங்கள் நண்பரே.... அந்த ஈழ ஈர நிலத்தில் புதைந்துபோன முகம் தெரிய உறவுகளையும் விடுங்கள். ஒவ்வொரு நாளும் மரணவேதனையில் வாழும் மக்களுக்கு ஒரு மனிதனாக நாமும் , நமது சுற்றமும் என்ன செய்தோம்? வலைப்பூவில் உணர்ச்சிபொங்க எழுதுவதை தவிர? கருணாநிக்கு கொஞ்சமும் குறைந்தவர் இல்லை நாம்..... அவர் மலை முழுங்கி நாமோ மடுவு முழுங்கிகள்

வெட்டு 1 துண்டு 2 said...

நண்பர் தமிழ்மணி அவர்களே,
நீங்கள் சொல்வதை நூறு விழுக்காடு ஏற்கிறோம்.

hayyram said...

நறுக்கென்று சொல்லி விட்டீர்கள்.

regards
ram

www.hayyram.blogspot.com

Ramaiah said...

Nannbar Nakkeeran Avergale,

Optimist Vs Pessimist.

A pessimist is one who makes difficulties of his opportunities and an optimist is one who makes opportunities of his difficulties

Anonymous said...

I cant believe this topic. christy gowtham